2.0 படம்: ஒரு நிமிட காட்சிக்கு 4 கோடி செலவாம்!

ஜினிகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 2.0 படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். அக்ஷ்ய் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் ஆகிய பணிகள் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருகின்றன. இந்த நிலையில் படம் 100 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மட்டும்தான். பொதுவாக தமிழ்ப்படங்கள் சுமார் இரண்டே கால் மணி நேரம் (135 நிமிடங்கள்) இருக்கும். ஆனால் 2.0 படம், ஆங்கில படம்போல 100 நிமிடங்கள் அளவுக்கே ஓடும்.

மொத்தம் 400 கோடி ரூபாய் செலவில் இந்தப்படம் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அப்படியானால் ஒரு நிமிட படத்துக்கு தலா 4 கோடி ரூபாய் செலவு! இந்தப் படத்தை ஆங்கிலத்தில் டப்பிங் செய்து மேற்கத்திய நாடுகளிலும் வெளியிடும் திட்டம் இருப்பதால் 100 நிமிடங்களில் முடித்திருப்பதாக கூறப்படுகிறது.
English Summary
rajnis 2.0-movie 4-crores for a minute show