நடிகர் பிரபுவிற்கு வருகிற டிசம்பர் 27ம் தேதி பிறந்தநாள். இந்த பிறந்தநாளோடு பிரபுவிற்கு 60 வயது ஆகிறது. இந்நிலையில், பிரபுவின் பிறந்தநாளையொட்டி பிரபுவை அவரது அன்னை இல்லத்தில் ரஜினி நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
ரஜினி நேரில் வாழ்த்தியது பிரபுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த சந்திப்பின் போது, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் பிரபு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உடனிருந்தனர்.
ரஜினியும் பிரபுவும் ‘குரு சிஷ்யன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘சந்திரமுகி’, ‘குசேலன்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.