நடிகர் ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!  ஜனாதிபதி வழங்குகிறார்

Must read

ஐதராபாத்,
பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர் ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த கவுரவ பட்டத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குகிறார்.
ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற ஐதராபாத் பல்கலைக்கழகம் ஷாருக்கானுக்கு கவுரவ டாக்கடர் பட்டம் வழங்குகிறது.
நாளை நடைபெற்றும் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். ஐதராபாத்தில்  உள்ள மவுலானா ஆசாத் உருது பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற இருக்கிறது.

இந்த விழாவில் மவுலானா ஆசாத் உருது பல்கலைக்கழகத்தில் பயின்ற 2,885 மாணவர்களுக்கும், தொலைதூர கல்வி மூலம் பயின்ற 44,235 பேருக்கும், முனைவர் பட்டத்துக்கான ஆய்வுகளை செய்துவந்த 276 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன், தெலுங்கானா மாநில துணை முதல் மந்திரி முஹம்மது மஹ்மூத் அலி பங்கேற்கின்றனர்.
இந்த சீர்மிகு விழாவில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானுக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்கப்பட இருக்கிறது. மேலும், உருது மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டமைக்காக ரேக்தா அமைப்பின் நிறுவனரான ராஜிவ் சரஃப் என்பவருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவிக்கிறார்.

More articles

Latest article