ரஜினி, கமலை பின்னுக்குத்தள்ளிய ஏ.ஆர்.ரஹ்மான் –   ஸ்ருதிஹாசன்!

Must read

உலகின் முன்னணி பத்திரிகையான ஃபோர்ப்ஸ், உலக அளவில் செல்வாக்கானவர்கள், அதிகாரம் படைத்தவர்கள், பணக்காரர்கள் என விதவிதமான பட்டியலை வெளியிடும்.
தற்போது இன்த இதழ் இந்தியாவின் முன்னணி 100 நட்சத்திரங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த  நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளனர்.
13வது இடத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளார். 30வது இடத்தில் நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார்.
46 வது இடத்தில் ஸ்ருதி ஹாசன், 47வது இடத்தில் தனுஷ் இருக்கிறார்கள். 49வது இடத்தில்  கமல்ஹாசன்  உள்ளனர்.
ரஜினிகாந்த்தை விட ஏ.ஆர்.ரஹ்மானும், கமல்ஹாசனை விட அவரது மகள் ஸ்ருதி ஹாசன் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் 51வது இடத்தில் சூர்யாவும், 61வது இடத்தில் விஜய்யும், 72வது இடத்தில் விக்ரமும், 90வது இடத்தில் பிரபு தேவாவும் உள்ளனர்.

More articles

Latest article