விஜய் ஆண்டனி நடித்த சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை ஆகிய படங்களை தயாரித்தவர் ‘ஸ்டுடியோ 9’ ஆர்.கே.சுரேஷ்.
பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலக்‌ஷ்மி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்தார் ஆர்.கே.சுரேஷ். அதன் பின்னர் மருது, தர்மதுரை ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது மீண்டும் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாரை தப்பட்டை படத்தில் சாதரன வில்லனாக நடித்த இவர் இப்படத்தில் வித்யாசமான கேரக்டரில் நடிக்க இருப்பதாக  கூறப்படுகிறது.