மார்ச் மாதத்தில் தொடங்கும் பொன்ராம்-சிவகார்த்திகேயன் படம்

Must read

ரெமோ படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இதையடுத்து பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 2017 மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றது. இப்படமும் கிராமத்தில் நடக்கும் காமெடி, காதல் கலந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article