திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

Must read

சென்னை:
திமுக கழக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் – மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஏ.வி.கே.ராஜா, கரூர் மாவட்ட செயலாளர் பகவான் பி.டி.பரமேஸ்வர் தலைமையில் பல நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

இதே போன்று சேலம் கிழக்கு மாவட்ட அமமுக அம்மா பேரவை தலைவர் திரு. எம்.காட்டுராஜா (எ) பழனிசாமி தலைமையில், அதிமுக – அமமுக – பாமக- தேமுதிக – கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

மேலும், மதுரை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அமமுக மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் ஏ.செல்வராஜ் அவர்கள் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

இவர்களுடன் ரஜினி மக்கள் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் – மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஏ.வி.கே.ராஜா –
கரூர் மாவட்ட செயலாளர் பகவான் பி.டி.பரமேஸ்வர் தலைமையில் பல நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

More articles

Latest article