சென்னை:
சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் முதலீட்டு பணம் 100 கோடி ரூபாயில் மோசடி செய்த வழக்கில் இந்தியன் வங்கி மேலாளர் வீடு உட்பட மூன்று இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் டெபாசிட் செய்த 100 கோடி ரூபாயில், போலி ஆவணங்கள் மூலம் 45 கோடி ரூபாயை வேறு கணக்கிற்கு மாற்றி மோசடி செய்தனர். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த கோயம்பேடு இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதிராஜா, துறைமுக பொறுப்பு கழகத்தின் அதிகாரியாக நடித்த கணேஷ் நடராஜன் மற்றும் இடைத் தரகர் மணிமொழி ஆகியோர் மீது கடந்த ஆகட்ஸ் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஆதாரங்களை திரட்ட சென்னை விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட மூன்று இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், இடைத் தரகர் மணிமொழியை கைது செய்தனர்.