ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் அரசு அமைத்துள்ள பணிக்குழு தொழிற்சாலைகளுக்கு நிவாரணமாக ரூ.700 கோடி வழங்கப் பரிந்துரை அளித்துள்ளது.
நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில் மற்றும் வர்த்தகம் முடங்கி பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்து தீர்வு வழங்க ராஜஸ்தான் மாநில அரசு பணிக்குழு ஒன்றை அமைத்தது.
அந்தப் பணிக்குழு தனது இடைக்கால அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ராஜஸ்தான் அரசு அனைத்து தொழிலகங்களுக்கு ரூ. 700 கோடி நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனப் பரிந்துரை அளித்துள்ளது. அத்துடன் ஜவுளி ஆலைகள் மேம்பாடு, மற்றும் மின் கட்டண ரத்து ஆகியவற்றையும் அளிக்கப் பரிந்துரை செய்துள்ளது.
மேலும் மாநிலத்தில் உள்ள மத்திய, சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளுக்கு உரிமம் மற்றும் பரிசோதனை ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது. அத்துடன் மாநில ஜி எஸ் டியில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு விலக்கி அளிக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.