சென்னை,

மிழக வெதர்மேன் தனமு முகநூல் பக்கத்தில்,  இன்றைய (நேற்று) மழை சும்மா ட்ரெய்லர்தான், இன்னும் பல பல அதிரடி திருப்பங்கள்  இந்த வாரம் முழுவதும் காத்திட்டிருக்கு என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பிரதீப் ஜான் என்பவர், தனிப்பட்ட முறையில் வானிலை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி வருகிறார். அவருடைய கணிப்பு பெரும்பாலும் சரியாகவே உள்ளது.

ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டில் சென்னையில் பெரு மழை பெய்து வெள்ளம் வந்தபோதும், 2016 ‘வார்தா’ புயலின்போதும் பிரதீப் ஜான் எனப்படும் தமிழக வெதர்மேனின் கணிப்புகள் 100க்கு 100 சதவிகிதம் உண்மையானது.

அரசு நிறுவனங்கள், ஜோசியர் போன்றோர்கள் விடுத்த கணிப்பைவிட, தமிழக வெதர்மேனின் கணிப்பே அன்றைய நிலவரத்தை உறுதி செய்தது. தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை வானிலை மையத்தைவிட, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வானிலை குறித்து கூறுவதே மக்கள் அதிகம் நம்புகின்றனர்.

அதுபோல அவ்வப்போது பல்வேறு தகவல்களை வெளியிட்டு வரும் வெதர்மேன், தற்போது பெய்து வரும் மழை குறித்து என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்..

சென்னை வானிலை மையம் தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும் என்று கணித்திருக்கிற நிலையில், வெதர்மேன் ஜானும், நேற்று பெய்துள்ள மழையைவிட இந்த வாரம் முழுதும் அதிகமான மழைபெய்யும் என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இந்த ஆண்டு நவம்பர்  மாதம்  முழுவதும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும், வழக்கமான வடகிழக்கு பருவமழையை விட அதிகமான மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று அவர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ”டெல்டா மாவட்டங்களில் அதிகமான மழை பதிவாகியிருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொள்ளிடத்தில் 200 மி.மீ மழை (காலை 8.30 மணிவரை 90 மி.மீ., அதன்பின் காலை 8.30-மதியம் 12.00 மணிவரை 115 மி.மீ) பதிவாகியுள்ளது.

காரைக்கால், திருவாரூர் மற்றும் சிதம்பரம், நாகப்பட்டினம் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரியிலும் மழை பெய்யும்.

சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் அதிக மழையை எதிர்பார்க்கலாம். இன்றைய மழை வெறும் ஆரம்பம்தான். இந்த வாரம் தமிழகத்தில் பல திருப்பங்கள் காத்திருக்கின்றன. நிறைய வதந்திகள் பரவும். 2-3 நாட்களுக்கு அதனையெல்லாம் பார்க்காமல் இருத்தல் நல்லது.” என குறிப்பிடப்பட்டடு உள்ளது..

மற்றொரு பதிவில், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில்  மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.