ஐ பி எஸ் தேர்வு : கணவருக்கு காப்பி அடிக்க உதவிய மனைவி கைது!

Must read

தராபாத்

சென்னை ஐ பி எஸ் தேர்வில் கணவருக்கு காப்பி அடிக்க உதவிய மனைவி ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று சென்னையில் நடந்த ஐ பி எஸ் தேர்வில்  அதிகாரி சபீர் கரீம் என்பவர் காப்பி அடிக்கும் போது பிடிபட்டது தெரிந்ததே.   இவர் பிரபல திரைப்படமான வசூல்ராஜா எம் பி பி எஸ் பாணியில் ப்ளூடூத் இயர் ஃபோன் மூலம் வினாக்களுக்கான விடை பெற்று அதை தேர்வில் எழுதி வந்துள்ளார்.    இதை கண்காணிப்பு அதிகாரிகள் பிடித்து அவருடைய ப்ளூடூத் டிவசை கைப்பற்றினார்.

அவர் வினாக்களை சொல்லச் சொல்ல அவருடைய மனைவி ஐதராபாத்தில் இருந்து சரியான விடைகளை அளித்து வந்ததும்,  அதை இவர் எழுதியதும் விசாரணையில் தெரிய வந்தது.   சபீர்கரீம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.   அவருக்கு உதவிய அவரது மனைவி ஜாய்சியும் ஐதராபாத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.   ஏற்கனவே அவர் எழுதிய தேர்வுகளிலும் இதே முறையில் எழுதியிருக்கக் கூடும் எனவும் அவருடைய மனைவி ஜாய்சி அப்போதும் இதே போல உதவி இருக்கக்கூடும் என்னும் கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

More articles

Latest article