சென்னை:

மிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள  வானிலை மையம் சென்னையில் வெப்பம் குறையும் என்றும் என்றும் கூறி உள்ளது.

மேலும், அடுத்த 2 நாட்களில் வங்கக்கடலில் விசாகப்பட்டினம் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழக மக்களை கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று வெயிலின் கடுமை சற்று குறைந்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் விளைவாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

ஆனால், சென்னை உள்பட பல  மாவட்டங்களில் நிலவி வந்த கடும் வெப்பம் காரணமாக, மக்கள் கடும் அடைந்தனர். அதேவேளையில், நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைத் நிலையில், தண்ணீருக்காக மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்னர்.

இந்த நிலையில், அடுத்த 2 நாட்களில் வங்கக்கடலில் விசாகப்பட்டினம் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும், சென்னை யில் வெப்பம் குறையும் என்றும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம்,  தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறி உள்ளது.