சென்னை:

மிழகத்தில் எம்.இ, எம்.சி.ஏ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் போன்ற முதுநிலை படிப்புக்கான நுழைவு தேர்வான டான்செட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி வரும் 23 மற்றும் 23ந்தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக்ம அறிவித்து உள்ளது.

பிஇ பொறியியல் படிப்பு கலந்தாய்வை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பக் கழகம் நடத்தும் நிலையில், உயர்நிலை படிப்பான  எம்.பி.ஏ, எம்.சி.ஏ., மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வான டான்செட் தேர்வை  அண்ணா பல்கலைக்கழகமே நடத்துகிறது.

இந்த தேர்வுக்கு ஏராளமானோர்  விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் 22 மற்றும் 23ந்தேதி தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

எம்.சி.ஏ. படிப்பிற்கு ஜூன் 22ம் தேதி காலை 10 முதல் 12 மணி வரையிலும் தேர்வு

எம்.பி.ஏ. படிப்புக்கு ஜூன் 22ம் தேதி பிற்பகல் 2.30 முதல் 4.30 மணி வரை

எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 23ம் தேதி காலை 10 முதல் 12 மணி வரையிலும் தேர்வு நடைபெறவுள்ளது.

மேலும் விவரங்கள் தேவைப்படுவோர்  அண்ணா பல்கலைக்கழக தொலைபேசி 044 22358314, 22358289 எண்களில் விவரங்களை அறியலாம் என தகவல் தெரிவித்துள்ளது.