சென்னை:

கோடநாடு விவகாரம் தொடர்பாக தன்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திய ஓய்வுபெற்ற  பத்திரிகை யாளர் மேத்யூ சாமுவேல் மீது ரூ.1கோடி நஷ்டஈடு கேட்டு முதல்வர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜெ. மறைவை தொடர்ந்து அவரது மர்மமான கொட நாடு எஸ்டேட்டில் கொள்ளை நடைபெற்றது. கேரளாவை சேர்ந்த நபர்கள் எஸ்டேட்டில் புகுந்து அங்குள்ள ஆவணங்களை திருடியதாக கூறப்பட்டது. இதில் எஸ்டேட் காவலாளி கொல்லப் பட்டடார். அதைத்தொடர்ந்து கொடநாடு எஸ்டேட் சம்பந்தப்பட்டவர்கள் பலர் விபத்து மற்றும் பல வகைகளில் கொலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து புலனாய்வு செய்த தெகல்ஹா இணையதள பத்திரிகையாளரான முன்னாள் செய்தியாளர்  மேத்யூஸ் சாமூவேல் பரபரப்பான வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியிருந்தார். அதில், இந்த கொலை, கொள்ளை சம்பவத்துக்கு பின்னணி யாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருந்ததாகவும், அப்போது கைப்பற்ற ஆவணங்களை கொண்டே கடைசியை கைக்குள் வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பான வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச நீதி மன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு  நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில்,   ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி பத்திரிகையாளர் மேத்யூசாமுவேல் மீது முதலமைச்சர் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மேத்யூ சாமுவேல் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து,  மேத்யூ சாமுவேல் மனுவுக்க  ஜுலை 4 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.