ஜோலார்ப்பேட்டை

யிலில் பயணம் செய்வோரைத் தொந்தரவு செய்து பணம் பறிக்கும் மூன்றாம் பாலினத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளது.

மூன்றாம் பாலினத்தவர் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்ப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் அதிக அளவில் உள்ளனர்.  இவர்கள் ரயிலில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வோரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் பலரிடம் வலுக்கட்டாயமாகப் பணம் பறிப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையொட்டி ஜோலார்ப்பேட்டை ரயில் நிலையத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கான ஆலோசனைக் கூட்டம் ஜோலார்ப்பேட்டை காவல் ஆய்வாளர் இளவரசி தலைமையில் வகித்தார்.   ரயில்வே பாதுகாப்புப்படை பிரிவு ஆய்வாளர் மணிவண்ணன் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் இப்பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொண்டனர்.

காவல்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில், “மூன்றாம் பாலினத்தவர் தொடர்ந்து ஓடும் ரயிலில் பயணிகளை மிரட்டி பணம் பறிப்பதாகவும் பணம் கொடுக்காதோரிடம் அநாகரீக செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் வருகின்றன.   தவிர சிலர் எல்லைகளை பிரித்துக் கொண்டு வசூல் செய்வதாகவும் ஒரு சில ஆண்கள் மூன்றாம் பாலினத்தவர் வேடத்தில் குற்றங்கள் செய்வதாகவும் புகார்கள் வருகின்றன.

மூன்றாம் பாலினத்தவர் கவுரவமாக வாழ மற்றும் சுய தொழில் செய்ய வங்கி மூலம் கடன்களும், தொழில் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.  மாவட்ட தொழில் மையத்தை அணுகி முழு விவரங்களும் தெரிந்து கொள்ளலாம்.  மாறாகப் பயணிகளை தொந்தரவு செய்து பணம் பறிப்பது குற்றமாகும்.  இனி இது போல் செய்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளனர்.