டில்லி,

டந்த 1ந்தேதி மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, 2018-19ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அத்துடன் ரெயில்வே துறைக்கான ஒதுக்கீடு குறித்தும் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ரெயில்வே திட்டங்களுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவந்துள்ளது.

அதன்படி  தமிழக ரெயில்வே திட்டத்துக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இது குறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 2009 முதல் 2014 வரை 879 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், 2018 – 19ம் நிதியாண்டில் 2,548 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 190 சதவீதம் கூடுதல்.

ஒசூர் முதல் கர்நாடக மாநிலம் பையபனஹள்ளி வரையிலான இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு 376 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 3,198 கி.மீ., தூரத்திற்கு ரூ.20,064 கோடி மதிப்பிலான 27 திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

.