ஜெயலலிதா நினைவிட டெண்டர் வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

Must read

சென்னை,

மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட டெண்டர் கோரப்பட்டதை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சமாதி அமைந்துள்ள  வளாகத்தில், கடந்த 2016ம் ஆண்டு மறைந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அந்த இடத்தில்  நினைவு மண்டபம் கட்ட அதிமுக அரசு முடிவு செய்து, அதற்கான  ரூ.45.63 கோடிக்கு ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது.

ஒப்பந்ததத்தை ரத்து செய்யக்கோரி,  ஒப்பந்ததாரர் நடராஜன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து,  இந்த வழக்கு  மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜெ.சமாதி கட்ட  சமூக சேவகர் டிராபிக் ராமசாமி தொடர்ந்துள்ள வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் தாக்கல் செய்த மனுவில், கடற்கரையில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்ற விதிகளை மீறி ஜெ.வுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

More articles

Latest article