லைக்கா நிறுவனத்தில் அதிரடி சோதனை! பரபரப்பு

சென்னை,

சென்னையில் உள்ள பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரடக்சன்ஸ் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

இன்று காலை லைக்கா நிறுவனத்துக்கு வந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் அதிக படங்களை தற்போது லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

ரஜினியின் 2.0′ படத்தை தயாரித்துள்ள இந்நிறுவனம் தற்போது அப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிஸியாக உள்ளது.

இந்நிலையில்,   சென்னை தி.நகரில் உள்ள லைக்கா திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் இன்று திடீர் சோதனை நடைபெற்று வருகிறது. இது திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Raid is happening now at Lyca Productions,Chennai.