20கோடி மதிப்பு: விபத்துகுள்ளான காரில் மரகதலிங்கம்!

மதுரை,

துரை அருகே காரும் பஸ்சும் மோதி கொண்ட விபத்தில், காருக்குள் சுமார் 10 லட்சம் மதிப்பிலான மரகலிங்கம் இருந்தது தெரிய வந்தது.

மதுரை அருகே நடைபெற்ற விபத்து ஒன்றில் காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் காரின் முன்பகுதி முழுவதும் கடும் சேதம் அடைந்தது. விபத்து காரணமாக காரில் பயணம் செய்த 4 பேரும் காயத்துடன் மயக்கமாயினர்.

தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, காரை அகற்றி, அதனுள் மயங்கி கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காரை சோதனை யிட்டபோது காருக்குள் மரகதலிங்க சிலை இருந்தது தெரிய வந்தது.

அதை கைப்பற்றிய போலீசார் அதன் மதிப்பு ரூ.20 கோடி என்று தெரிவித்தனர். இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லிங்கம் கடத்தி செல்லப்பட்டபோது நடைபெற்ற இந்த விபத்து, கடவுள் இருக்கிறான் என்பதை உணர்த்துவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
English Summary
20 crore worth Emerald lingam in the accident car near Madurai!