சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறையில் இனி ‘கவுன்சிலிங்’ மூலம் மட்டுமே பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
பொதுப் பணியிட மாறுதல்கள் இனி முற்றிலும் வெளிப்படையான முறையில், கலந்தாய்வு மூலமாக மட்டுமே நடத்தப்படும் என்றும், அதுபோல, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அதுபோல கவுன்சிலிங் மூலமே இடமாறுதல் வழங்கப்படும் என கூறினார்.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அமைந்துள்ள சூழலில், பணி இடமாறுதலுக்கான கையூட்டு பெறுவதை தவிர்க்கும் வகையில், கலந்தாய்வு மூலமே பணியிட மாறுதல் நடத்த வேண்டும் என முதல்வர் விஜய் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து, பேசிய அமைச்சர் அருண்ராஜ், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான பொதுப் பணியிட மாறுதல்கள் இனி முற்றிலும் வெளிப்படையான முறையில், கலந்தாய்வு மூலமாக மட்டுமே நடத்தப்படும் என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பல்வேறு பதவிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும், பொது பணியிட மாறுதல் என்பது இனி கலந்தாய்வின் மூலம் முழுமையாக, வெளிப்படையான முறையில் மட்டுமே நடத்தப்படும்.
பணியிட மாறுதலில் எவ்வித முறைகேடுகளும் நடக்கக்கூடாது என்பதை உறுதிசெய்யும் வகையில், துறை சார்ந்த காலிப்பணியிடங்கள் குறித்த முழுமையான விவரங்கள் அனைத்தும், கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பாகவே சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்களும் ஊழியர்களும் அறியும் வண்ணம் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
புதிய அரசு மற்றும் புதிய அமைச்சர் பொறுப்பேற்றுள்ள நிலையில், சுகாதாரத்துறையைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியிட மாறுதல் (Transfer) கோரி அமைச்சர் அலுவலகத்தை நேரடியாக நாடுவதாகத் தெரிகிறது. இதனைக் கண்டித்துள்ள அமைச்சர், உயர் அலுவலர்களின் முறையான அனுமதியின்றி, விதிகளுக்குப் புறம்பாக யாரும் அமைச்சரை நேரடியாக அணுகக் கூடாது என்றும், கோரிக்கைகள் அனைத்தும் கலந்தாய்வு விதிகளின்படியே பரிசீலிக்கப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அதிரடி உத்தரவு சுகாதாரத்துறை ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
[youtube-feed feed=1]