சென்னை

ன்று காலை தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகிறார்.

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து களத்தில் இறங்கி உள்ளன.  தேர்தல் தேதி நெருங்கி வருவதால்  மாநிலம் எங்கும் அனைத்துக் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகின்றன.

அவ்வகையில் இன்று திமுக – கூட்டணி வேட்பாளர்கள் சார்பில் பிரசாரத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகிறார்.  அவர் காலை சுமார் 11 மணிக்கு விமானம் மூலம் சென்னை வருகிறார்.  பிறகு கார் மூலம் வேளச்சேரி சென்று அங்குப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானாவை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

அடையாறு சாஸ்திரி பவனில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டுகிறார்.  அதன் பிறகு ராகுல் காந்தி கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்குச் செல்கிறார்.  அந்த விடுதியில் மதிய உணவை முடித்த பிறகு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

மாலையில் சேலம் சிலநாயக்கன் பட்டியில் நடைபெறும் திமுக பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.  அவருடன் அந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிடோர் கலந்து கொள்கின்றனர்.  சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அங்கு ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார்..