பாட்னா:
திர்க்கட்சிகள் ஓரணியில் திரள எதிர்க்கட்சிகளுக்கு ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

பாட்னா காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, இந்தியாவில் தற்போது நடைபெறுவது சித்தாந்தங்களுக்கு இடையிலான போர் என்றும், நாட்டு மக்களை பிரிக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாட்டையும், மக்களையும் ஒற்றுமைப்படுத்தும் பணியை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது என்றும், வெறுப்பு உணர்வை அன்பால் மட்டும் தான் வெல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.