டில்லி

ன்று பிரதமர் மோடியின் 73 ஆம் பிறந்த நளை முன்னிட்டு பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று பிரதர்மோடி தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனால் பிரதமர் மோடிக்குக் குடியரசுத் தலைவர், துணை குடியர்சுத் தலைவர், பாஜக தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் கட்சியினர், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிறந்தநாள் தினத்தன்று பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அவர் உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதைப்போல் காங்கிரஸ் தலைவர், ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.