ஜல்லிக்கட்டு: ஆபாசமாக பேசிய ராதாராஜனை தேசியபாதுகாப்பு சட்டப்படி கைது செய்ய கோரிக்கை

Must read

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி போராடி வரும் இளைஞர்களை கொச்சைப்படுத்தும் விதமாக, “ஃப்ரீ செக்ஸ் என்றால்கூடத்தான் ஐம்பாதாயிரம் பேர் கூடுவார்கள்” என்று இழிவாக பேசிய விலங்கு நல ஆர்வலர் ராதாராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்போவதாக, தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவித்துள்ளதாவது:

“ போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியுடன் போராடி வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கொச்சைப்படுத்தி, அவர்களின் மனதை புன்படுத்துகின்ற வகையிலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து கலவரத்தை உருவாக்கும் வகையிலும்,  பிபிசி வானொலியில் பீட்டாவின் ஆதரவாளரான ராதா ராஜன் பேசியிருக்கிறார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும், இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையரிடம் இன்று புகார் தெரிவிக்க இருப்பதாகவும் பொன்னுசாமி அறிவித்துள்ளார்.

முக்கிய செய்தி:

விலங்கு ஆர்வலர் ராதாராஜன், பி.பி.சி. வானொலிக்கு அளித்த பேட்டியில், “தனித்தமிழ்நாடு வேண்டும் என்றால் 25 ஆயிரம் பேர் கூடுவார்கள், ப்ரீ செக்ஸ் என்றால் 50 ஆயிரம் பேர் கூடுவார்கள்” என்று மாணவர்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பேசியிருந்தார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை சொந்த இடத்தில் நடத்திக்கொள்வதாக சிலர் சொல்கிறார்கள். அப்படியானால் நான் என் வீட்டில் தீண்டாமையை கடைபிடிப்பேன், பால்ய திருமணம் நடத்துவேன்” என்று பேசி அதிரவைத்தார்.

அதோடு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பகுத்தறிவாளர், மக்கள் போராளியான கோவிந்த் பன்சாரேவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சமீர்கெய்வாட்  என்ற இந்துத்துவ சாமியாரை ஆதரித்தும் பேசினார் ராதா ராஜன்.

இவற்றைக் குறித்து நாம் வெளியிட்ட செய்தியை முகநூலில் பதிய முடியாமல் புகார் அளித்து நீக்கியிருக்கிறது ராதாராஜன் குழு.

ராதாராஜனின் நாகரீகமற்ற பேச்சு குறித்து நமது இதழில் வெளியான செய்திக்கட்டுரை தொடுப்பு கீழே:

ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விலங்கு பெண்மணி ,ஃப்ரீ செக்ஸூக்கு 50 ஆயிரம் பேர் வருவாங்க..

Also read

  1. ஃப்ரீ செக்ஸூக்கு 50 ஆயிரம் பேர் வருவாங்க!: ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விலங்கு பெண்மணி
  2. ஆபாச படங்கள்! குழந்தைகளை, இளைஞர்களை தவறான பாதைக்கு இழுப்பு! ‘பீட்டா’ மீது காவல்துறையில் புகார்

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article