தெள்ளு தமிழில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த மம்முட்டி!

Must read

மிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தூய தமிழில் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் ,தமிழில் ட்வீட் செய்ததற்கு அதிகளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் பல இந்திய பிரபலங்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவை தெரிவித்து வீடியோ  வெளியிட்டுள்ளார்.

அதில், “எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல்,எந்த ஒரு தலைவரின் துணையும் இன்றி ஆண்,பெண் ஜாதிமத பாகுபாடின்றி,லட்சக்கணக்காண பேர் துளியும் வன்முறை இல்லாமல், தமிழ்நாட்டில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய இந்த போராட்டம் இந்தியாவிற்கே ஒரு எடுத்துக்காட்டு.வாழ்த்துகள் தோழர்களே..!”என தூய தமிழில் பேசியுள்ளார்.

More articles

Latest article