ண்டிகர்

ன்று பஞ்சாப் வந்த பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையம் செல்லாதது குறித்து அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கம் அளித்துள்ளார்.

இன்று பிரதமர் மோடி ஃபெரோஸ்பூரில் ஒரு பேரணியில் உரையாற்றத் திட்டமிட்டிருந்தார். அதையொட்டி அவர்  ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லவிருந்தார்.  மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அவர் சாலை வழியாகப் பயணம் செய்ய நேர்ந்தது.

வழியில் பிரதமர் மோடியின் வாகனங்களை விவசாயிகள் தடுத்ததால், பிரதமர் மற்றும் அவரின் பாதுகாப்பு வாகனங்கள் மேம்பாலில் சுமார் 20 நிமிடங்கள் சிக்கிக்கொண்டதால், பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.   இது குறித்து பஞ்சாப் அரசு மற்றும் முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.  மேலும் பிரதமரை வரவேற்க முதல்வர் விமான நிலையத்துக்குச் செல்லவில்லை என்பது குறித்தும் பல கருத்துக்கள் எழுந்தன.

இது குறித்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, “பிரதமரிடம் மோசமான வானிலை மற்றும் எதிர்ப்புகள் காரணமாகப் பயணத்தை நிறுத்துமாறு ஏற்கனவே கேட்டுக் கொண்டோம்.  அவரது திடீர் பாதை மாற்றம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. பாதுகாப்பு குறைபாடு ஏதும் பிரதமர் வருகையின் போது இல்லை,

நான்  பிரதமர் மோடி இன்று ஃபெரோஸ்பூர் மாவட்டத்திற்குச் செல்லமுடியாமல் திரும்பியதற்கு வருந்துகிறேன். எங்கள் பிரதமரை நாங்கள் மதிக்கிறோம், என்னுடைய செயலாளருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று பரிசோதனை செய்ததை அடுத்து, பிரதமரை வரவேற்க அமைச்சர் அனுப்பப்பட்டார்” என விளக்கம் அளித்துள்ளார்.