புதுச்சேரி:
புதுச்சேரி அமைச்சரவை பட்டியலில் உள்துறை பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்., – பா.ஜ., கூட்டணி 16 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. முதல்வராக ரங்கசாமி கடந்த மாதம் 7-ம் தேதி பதவியேற்றார்.

இரு கட்சிகளும் சபாநாயகர் பதவி, அமைச்சர் பதவிகளை பங்கிட்டுக் கொள்வதில், ஒரு மாதமாக இழுபறி நீடித்தது. இரு கட்சி பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, முதல்வர் ரங்கசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு பேசினார்.

அதையடுத்து, பதவி பங்கீட்டில் சுமூக தீர்வு ஏற்பட்டது. அதில், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 3 அமைச்சர் பதவி, துணை சபாநாயகர் பதவியும், பா.ஜ.வுக்கு சபாநாயகர், 2 அமைச்சர் பதவிகள் வழங்க உடன்பாடு ஏற்பட்டது.பா.ஜ.கவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்.ஏ.க்கள் 6 பேர், 3 நியமன எம்.எல்.ஏ.,க்கள், 3 சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. இவர்களில் யாருக்கு அமைச்சர் பதவி, சபாநாயகர் பதவி கொடுப்பது என்பது தொடர்பாக, கட்சி மேலிட பொறுப்பாளர்கள் இரு நாட்களாக ஆலோசித்து முடிவு செய்தனர்.

இந்நிலையில், புதுச்சேரி அமைச்சரவை பட்டியலை முதலமைச்சர் ரங்கசாமி ஆளுநரிடம் வழங்கினார். துணை முதல்வர் பதவி இல்லை என்று முதலமைச்சர் ரங்கசாமி திட்டவட்டமாக கூறிய நிலையில், உள்துறை பாஜாகவுக்கு ஒதுக்கப்பட்டதால் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்