சென்னை:
மிழக வளர்ச்சி கொள்கை குழுவின் உறுப்பினர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

தமிழகத்தில் ‘திட்டக் குழு’ என்ற அமைப்பை 1971 இல் அப்போதைய முதல்வர் கலைஞர் ஏற்படுத்தியிருந்தார். தற்போது அது ‘தமிழக வளர்ச்சி கொள்கை குழு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதனுடைய தலைவராக தமிழக முதல்வர் இருக்கிறார். இந்நிலையில் தமிழக வளர்ச்சி கொள்கை குழுவின் உறுப்பினர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முழுநேர உறுப்பினராக பேராசிரியர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பகுதி நேர உறுப்பினர்களாக ம.விஜயபாஸ்கர், சுல்தான் அகமது, இஸ்மாயில், மு.தீனபந்து, மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் பகுதி நேர உறுப்பினர்களாக மல்லிகா சீனிவாசன், சித்த மருத்துவர் கு.சிவராமன், நர்த்தகி நடராஜ் என முதல்வர் தலைமையிலான இக்குழுவின் துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர், பகுதி நேர உறுப்பினர்கள் என மொத்தம் பத்து பேர் இடம் பெற்றுள்ளனர்.