டெல்லி: இந்தியாவில் கோடிக்கணக்கான இளைஞர் சமுதாயம் விளையாடி வந்த சீனா செயலி யான பப்ஜி உள்பட 118 சீன செயலிகளை இந்தியரஅரசு அதிரடியாக தடை செய்து உத்தரவிட்ட நிலையில்,  கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் இந்தியாவில் உள்ள ஆப்பிள்  ஆப் ஸ்டோரிலிருந்து பப்ஜி உள்பட தடை செய்யப்பட்ட செயலிகள் அதிரடியாக அகற்றப்பட்டுள்ளது.

இநதியா சீனா இடையே ஏற்பட்ட எல்லை மோதலைத் தொடர்ந்து, சீனாவுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பை உருவாக்கி வருகிறது இந்தியா. முதல்கட்டமாக சீனா நிறுவனங்கள் இந்தியா வில் தொழில் தொடங்கவோ, இந்திய டெண்டர்களை கைப்பற்றவோ தடை விதிக்கப்பட்ட நிலையில்,  சீனாவின்  மொபைல் செயலிகளுக்கும்  ஆப்பு வைத்து வருகிறது. ஏற்கனவே  டிக்டாக் உள்பட பிரபல செயலிகளை, 2 தடவையாக தடை விதிக்கப்பட்ட நிலையில், 3வது தடவையாக பிரபல கேம் விளையாட்டான பப்ஜி விளையாட்டுக்கும் அதிரடியாக தடை விதித்து.

அதைத்தொடர்ந்து, மொபைல் செயலிகள் தரவிறக்கம் செய்யும், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் அந்நிறுவனங்கள் அகற்றி உள்ளது.

முன்பு சீனாவுடன் இணைக்கப்பட்ட செயலிகளைத் தடை செய்த போது தெரிவித்ததைப் போலவே, இந்திய அரசாங்கம் சமீபத்திய பயன்பாடுகளுக்கான தடைக்கான காரணமாக நாட்டின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சிக்கல்களை முன்னிலைப்படுத்தியது. இந்த பயன்பாடுகள் பயனர் தரவை சேகரித்து நாட்டிற்கு வெளியே உள்ள சேவையகங்களுக்கு அனுப்புவதாகக் கூறி புகார்கள் வந்ததாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது.

இனிமேல்,  ஆன்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு , பப்ஜி கேம் பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏழற்பட்டுள்ளது.