டெல்லி: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை  வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், குறிப்பிட்ட சில பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்று முன்னேற்ற தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கும் செப்டம்பரில் மறு தேர்வு நடத்துவதாக சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

அந்த தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கலாகின. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மறு தேர்வு நடத்தும் விவகாரத்தில் வரும் 7ம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டது.

இந் நிலையில் 10, 12ம் வகுப்பு மறு தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டு உள்ளது. 10ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 முதல் 28 வரை தேர்வு நடைபெறுகிறது. 12ம் வகுப்பு தேர்வு செப்டம்பர் 22 முதல் 29  வரை தேர்வு நடைபெறும்.

1,278 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது, ஒரு அறையில் 12 மாணவர்களுக்கு பதில் 10 மாணவர்கள் அமர வைக்கப்படுவர் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. முகக்கவசம் அணிதல், சானிடைசர், தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.