04/09/2020: தமிழக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..

Must read

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது.  இன்று ஒரே நாளில், 5,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று மாலை நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,51,827 ஆக அதிகரித்துள்ளது.  இன்று ஒரே நாளில்  மேலும் 79 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,687 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,334 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,92,507 -ஆக உயர்ந்துள்ளது.

அதிகபச்மாக சென்னையில் இன்று ஒரே நாளில் 992 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. சென்னையில் இதுவரை 1,39,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,24,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12,003 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று 12 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,826 ஆக உள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 595 பேரும், கடலூரில் 499 பேரும், செங்கல்பட்டில் 370 பேரும், திருவள்ளூரில் 260 பேரும், சேலத்தில் 238 பேரும் , கள்ளக்குறிச்சியில் 182 பேரும், விழுப்புரத்தில் 148 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் 152 பேரும், மதுரையில் 123 பேரும், தஞ்சாவூரில் 164 பேரும் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

More articles

Latest article