குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்க இருப்பதாக மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் கூறியிருப்பது அவர் எந்தநாட்டைச் சேர்ந்தவர் என்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பாங்கான் மக்களவை தொகுதி உறுப்பினரான 41 வயதான சாந்தனு தாக்கூர் இந்திய குடிமகன் இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக 2014 டிசம்பர் 31 வரை இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இஸ்லாமியர் அல்லாத பிறமதத்தைச் சேர்ந்த 31313 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் மேற்கொண்டுள்ளது.

சி.ஏ.ஏ. சட்டம் மூலம் குடியுரிமை பெற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்க வகை செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அமைச்சரின் இந்த பேச்சு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய குடிமகனாக இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் தங்கியிருக்கும் ஒருவருக்கு தேர்தலில் நிற்க பாஜக எப்படி சீட்டு வழங்கியது என்பது குறித்தும் பங்களாதேஷைச் சேர்ந்த அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது எப்படி என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது உள்ளது.

இதுகுறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தவிர பாஜக தலைமையும் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.