சென்னை,

னாதிபதி தேர்தல் பாஜ வேட்பாளருக்கு ஓபிஎஸ் அணியும் ஆதரவு தெரிவித்து உள்ளது. நேற்று மாலை எடப்பாடி தலைமையிலான அதிமுக அம்மா அணி ஆதரவு என்று அறிவித்திருந்தது. தற்போது ஓபிஎஸ் அணியும் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்து உள்ளது.

நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பாரதியஜனதா சார்பாக, வேட்பாளராக ஒரிசா முன்னாள் கவர்னர், உ.பி.யை சேர்ந்த  ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டு உள்ளார்.

அவருக்கு ஆதரவு கேட்டு மோடி மாநில கட்சி தலைவர்களிடம் பேசி வருகிறார். அதையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஓ.பி.எஸ்., தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த  ஆலோசனையில் மைத்ரேயன் உள்பட 12 எம்பி,12 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

இதில், பாரதியஜனதா வேட்பாளர்  ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து

தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும், எம்.பி.,க்களும், ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக ஓட்டு போடுவார்கள் என ஓ.பி.எஸ். கூறினார்.