சென்னை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுக ஆட்சியில், பெண்கள் பாலியல் சம்பவம்,  கஞ்சா அதிகரித்துள்ளது என்று பேசிய கூட்டணி கட்சி தலைவரான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு, திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தனது நிலைப்பாட்டை மாற்றி பேசியுள்ளார்.

‘பெண்களுக்கு திமுகதான் காவலன்’ என்று கூறியதுடன், தனது பேச்சை ஊடகங்கள் மாற்றி செய்தி வெளியிட்டுள்ளதாக, ஊடகங்கள் மீது பழியை சுமத்தி உள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. இந்த   சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில்  தேமுதிக. இணைந்திருக்கிறது. தனது தம்பிக்கு ராஜ்யசபா பதவி பெறுவதற்காக திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார் பிரேமலதா. தேமுதிக தலைவர் மறைந்த  விஜயகாந்த் உயிரோடு இருந்தவரை கலைஞர் கருணாநிதியையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது அவர் இல்லாத நிலையில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் பிரேமலதா.  இது தேமுதிக  தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்தான், திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் என எல்லோரும் இந்த மேடையில் பேசிய பிரேமலதா ‘தமிழநாட்டில் அண்ணன் ஸ்டாலின் ஆட்சியில் பெண்கள் மீதான் பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் அதிகமாக புழங்குகிறது.. இந்த இரண்டு பிரச்சனைதான் இருக்கு. வேறு எந்த பிரச்சனையும் இல்லை’ என பேசி திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும், இந்த நிலையில்தான், மீண்டும் அது போன்ற ஒரு இன்னொரு வேலையை செய்திருக்கிறார் பிரேமலதா. திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியை ஆதரித்து பிரச்சாரம் செய்த பிரேமலதா ‘திருப்பரங்குன்றத்தில் நிச்சயமாக முருகன் அருளால் தீபம் ஏற்றப்படும்.. இங்குள்ள மக்களின் வாழ்க்கையும் உயரும்.. கிருத்திகா தங்கபாண்டி மக்களின் வாழ்க்கையில் தீபம் ஏற்றுவார்’ என பேசினார்.

திருப்பரங்குன்றத்தில் சிலர் தீபம் ஏற்று முயன்றபோது மத நல்லிணக்கத்தை காரணம் காட்டி திமுக அரசு காவல்துறையினரை கொண்டு அதை தடுத்தது. அதோடு நீதிமன்றம் சொல்லியும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற திமுக அரசு அனுமதிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் திமுக அரசுதான் என்ற நிலையில், அதற்கு எதிராக பிரேமலதா பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இது திமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  திமுக அமைச்சர்கள் மற்றும்  பலர், பிரேமலதாவுக்கு எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் பரவின. மேலும் சமூக வலைதளங்களில்,  துரந்தர் பட ஹீரோ போல திமுகவில் கூட்டணியில் இருந்துகொண்டே உளவாளியாக பிரேமலதா செயல்படுகிறார் என விமர்சித்தனர்.

திமுக தரப்பில் கடுமையான மறைமுக எதிர்ப்பு எழுந்த நிலையில், ,  இதுபற்றி விளக்கம் அளித்துள்ள பிரேமலதா ‘நான் பேசியது வேறு.. ஆனால் ஏதோ திமுகவை குறை சொன்னதுபோல சித்தரிக்கிறார்கள்.. என ஊடகங்கள்மீது பழியை சுமத்தி,  தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பது திமுக ஆட்சிதான்’ என்று பல்டி அடித்துள்ளார்.

[youtube-feed feed=1]