சென்னை: மத்தியஅரசின் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 37 மாதிரி சூரிய கிராமங்கள் உருவாக்குவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணியை எரிசக்திக் கழகம் மேற்கொண்டுள்ளது.

உலகெங்கும் தற்போது மறுசுழற்சி மின் உற்பத்திக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவ்வகையில் காற்றாலை, சூரிய ஒளி ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்வது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஆண்டு முழுவதும் வெயில் அடிக்கும் என்பதால் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்வதில் அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
வீடுகளில் சூரிய சக்தி மின் பயன்பாட்டை ஊக்குவிக்க ‘பிஎம், சூா்ய கா்முப்த் பிஜிலி யோஜனா’ (PM-Surya Ghar, Muft Bijli Yojana) திட்டத்தை மத்திய அரசு 2024-இல் தொடங்கி ஊக்குவித்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வீடுகளில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க 1 கிலோவாட்டுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
இதற்கிடையில், மத்தியப்பிரதேச மாநிலம் ரீவா நகரில் 750 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் 1500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இவை 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு 500 ஏக்கரில் 250 மெகாவாட் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
‘இந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் மாதிரி சூரிய கிராமங்கள் அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கிராமத்தில் சூரிய சக்தி மின் நிலையம் அமைத்து அதன்மூலம் கிடைக்கும் மின்சாரத்தை அங்குள்ள வீடுகள், பஞ்சாயத்து அலுவலகங்கள் உள்ளிட்ட பொது பயன்பாட்டு கட்டடங்களுக்கு சூரியசக்தி மின்சாரம் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 37 மாதிரி சூரிய ஆற்றல் கிராமங்கள் உருவாக்கப்பட உள்ளன; இதில் சென்னையில் எதுவும் இல்லை. ‘தேர்வுக்கான கோரிக்கை’ (Request for Selection) செயல்முறையின் வாயிலாக, அடையாளம் காணப்பட்ட கிராமங்களுக்கு மிகவும் பொருத்தமான சூரிய ஆற்றல் பயன்பாட்டு முறையை ஆய்வு செய்து பரிந்துரைப்பதற்காக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் — குறிப்பாகச் சூரிய ஆற்றல் — துறையில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு ஆலோசகரை TNGECL நிறுவனம் தேடி வருகிறது.
ஒரு சூரியசக்தி கிராமம் அமைக்க மத்திய அரசு ரூ.1 கோடி நிதியுதவி வழங்குகிறது. தமிழகத்தில் சென்னையைத் தவிா்த்து 37 மாவட்டங் களிலும் சூரியசக்தி கிராமம் உருவாக்கும் பணிகளை மின்வாரியத்தின் துணைநிறுவனமான பசுமை எரிசக்திக் கழகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கும் கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு, மாதிரி சூரிய கிராமங்கள் உருவாக்கப்பட உள்ளன.
அதற்கான இடம், அதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான மின் வழித்தடம் அமைப்பது உள்ளிட்டவை தொடா்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்ததும் மின் நிலையம் அமைக்கப்பட்டு, கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்தி மின்சார விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]