சென்னை:  தமிழகத்தில் நடப்பாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்,   நாய்கடியால் ஏற்பட்ட ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்​தில் நடப்​பாண்​டில் நாய்க்​கடி​யால் 2 லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். ரேபிஸ் நோய் தொற்​றால் 13 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். தமிழகம் முழு​வதும் சுமார் 25 லட்​சம் தெரு​நாய்​கள் இருக்​கலாம் என்று உத்​தேச புள்​ளி​விவரங்​கள் தெரிவிக்​கின்​றன.

நாய் கடி தடுப்பூசி சென்னை போன்ற நகரங்களில் மட்டுமே கிடைப்பதால், கிராமப்புறங்களில் நாய் கடிகளால் பாதிக்கப்படுபவர்கள் முதல் நாள், மூன்​றாவது நாள், ஏழாவது நாள் மற்​றும் 21-வது நாள் என 4 தவணை​களாக ரேபிஸ் தடுப்​பூசி செலுத்த வேண்​டும்.

இம்​யூனோ குளோபளின் மருந்​தானது முதல் நாளி​லேயே ரேபிஸ் தடுப்​பூசி​யுடன் செலுத்​தப்பட வேண்​டும். கால​தாம​தாகவோ அல்​லது அதை மட்​டும் தனி​யாகவோ செலுத்​தி​னால் பலன் இல்​லை. இதைக் கடைபிடித்​தால் ரேபிஸ்​ நோய்​ தொற்​றை தடுக்​கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]