நிலவின் தென் துருவத்தில் சல்பர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான்-3ல் திட்டத்தின் முக்கிய அம்சமான பிரக்யான் ரோவர் உலவி நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆய்வு தொடர்பான விவரங்களை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ரோவர் கலனில் உள்ள Laser-induced Breakdown Spectroscope
– LIBS ஆய்வு கருவி நிலவின் மேற்பரப்பில் ஆக்சிஜன், சல்பர் ஆகிய தனிமங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளது.

தவிர, இரும்பு குரோமியம், டைட்டானியம், அக்னிசியம் சிலிக்கான்- உள்ளிட்ட கனிமங்கள் உள்ளதையும் கண்டறிந்துள்ளது. ஹைடாஜனை கண்டறியும் முயற்சியில் ரோவர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள எலக்ட்ரோ ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் (LEOS / ISRO) வில் உருவாக்கப்பட்ட இந்த LIBS ஆய்வு கருவி அனுப்பிய அளவீடுகளைக் கொண்டு நிலவின் தென் துருவத்தில் சல்பர் இருப்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

மேலும், இந்த அளவீடுகள் மூலம் சந்திர மேற்பரப்பில் அலுமினியம், சல்பர், கால்சியம், இரும்பு, குரோமியம் மற்றும் டைட்டானியம் ஆகியவற்றின் இருப்பை வெளிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.