நாகூர்

நாகப்பட்டினத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனம் ஒரு வருடமாக மின் கட்டணம் செலுத்டாதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்னும் மத்திய பொதுத்துறை நிறுவனம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி என்னும் சிற்றூரில் இயங்கி வருகிறது.  இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகம் நாகூரில் உள்ள பண்டக சாலை தெருவில் செயல்பட்டு வருகிறது.  இங்குள்ள ஆலையில் விரிவாக்கப்பணி கள் நடந்து வருகிறது.

கடந்த ஒரு வருடமாகச் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் மின் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளது.  நாக்ஜை மாவட்ட மின்சாரத்துறை இந்த நிறுவனத்துக்குக் கட்டண பாக்கி குறித்து நினைவூட்டல் அறிவிப்புகள் அளித்துள்ளன.  ஆயினும் நிறுவனம் மின் கட்டணம் செலுத்தவில்லை.  இன்று காலை மின் வாரிய அதிகாரிகள்  இந்நிறுவன அலுவலகத்துக்கு வந்துள்ளனர்.

அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.  என அதிகாரிகள் உத்தரவின் பேரில் நாகூர் மின் வாரிய ஊழியர்கள் அலுவலக மின் இணைபைத் துண்டித்தனர்.  இதையொட்டி இங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.    செய்தியாளர்கள் இது குறித்து சென்னை அலுவலகத்தில் கேட்ட போது மின் கட்டண பாக்கி விரைவில் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.