சென்னை: பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று கூறிய ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகறிது.

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடிக்கு  எதிரான வழக்கின்  தண்டனையை  சஸ்பெண்டு செய்தது.  இதையடுத்து, பொன்முடியின் எம்எல்ஏ பதவி மீண்டும் கிடைத்துள்ள நிலையில், அவரை அமைச்சராக பதவி பிரமாணம் செய்யும்படி முதலமைச்சர் ஸ்டாலின்  ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், ஆளுநர் அதை ஏற்க முடியாது என்றும்,  உச்சநீதிமன்றம் பொன்முடி மீதான தண்டனை மட்டுமே நிறுத்தி வைத்துள்ளது, அவர்  குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

இதனால் ஆளுநர்மீது கடும் கோபத்தில் உள்ள திமுக அரசு, ஆளுநர்மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஏன் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது! ஆளுநர் கூறும் காரணம் என்ன?

ஆளுநரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்! ஆர்.என்.ரவிக்கு திமுக எம்.பி. வில்சன் கண்டனம்