தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள 9 தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியானது.

திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, கரூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட திருச்சி ஆரணி, தேனி ஆகிய தொகுதிகளுக்கு பதிலாக கடலூர், மயிலாடுதுறை மற்றும் நெல்லை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.