சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டது, தமிழக மக்களிடையே அதிருப்தி எழுந்த நிலையில், அந்த பொருட்களை  நிறுவனங்கள் மற்றும் அதற்குசு உடந்தையாக இருந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகஅரசு, வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமற்று இருந்த நிலையில், பல ரேசன் கடைகளில் அறிவித்தபடி, ரேசன்கார்டு 21 பொருள் கள்  வழங்கப்படாததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பொதுமக்கள் திமுக அரசு மீது அதிருப்தி அடைந்தனர். இதுதொடர்பான செய்திகள் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல், விநியோகம் தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து,  பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஒருசில பகுதிகளில் சில நிறுவனங்கள் மூலம் வழங்கிய பொருட்கள் குறைபாடு இருந்ததாகவும், சம்மந்தப்பட்ட நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்கவும் மற்றும் பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் புகார் எழக் காரணமாக இருந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கம் முதவர் உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.