சென்னை: வரும் 23ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, ஞாயிற்றுக்கிழமை (23-1-2022) அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத் தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத் தப்பட்ட நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து 42 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 62,007 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டும், கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரித்தும் தமிழகஅரசு ஜனவரி 31ந்தேதி அறிவித்து உள்ளது. இதற்கிடையில் தீவிர தொற்று பரவல் காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கு கடந்த இரு வாரமாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், வரும் ஞாயிறன்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துஉள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்; தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட இரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.