ராய்ப்பூர்

த்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்பொது தொடங்கி உள்ளது.

இன்று 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்காரில் முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இன்று 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களில் 25 பேர் பெண்கள் ஆவர்.

இங்கு வாக்கு பதிவு காலை 7 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு சிக்கல் நிறைந்த 10 தொகுதிகளில் மட்டும் பிற்பகல் 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் 40 தொகுதிகள் உள்ளன. இன்று மிசோரம் சட்டசபைத் தேர்தலுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இங்கு ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்களின் இயக்கம், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 170 பேர் போட்டியிடுகின்றனர்.

இன்று காலை 7 மணி அளவில் மிசோரமில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடந்து வருகிறது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்கு வந்து வரிசையில் நின்று, தங்களுடைய வாக்குகளைச் செலுத்த ஆர்வமுடன் உள்ளனர்.