டெல்லி:  மாநிலஅரசுகள் இயற்றும்  மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் முன் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என கூறிய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சந்திரசூடு,  மாநில அரசுகள் நீதிமன்றங்களை அணுகிய பின்னரே ஆளுநர்கள் ஏன் மசோதாக்களில் செயல்படுகிறார்கள்? இதை நிறுத்த வேண்டும் என்று கூறியதுடன், “மாநில கவர்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் அல்ல என்பதை ஆளுநர்கள் மறந்துவிடக் கூடாது” என்றும் தெரிவித்தார்.

மேலும்,  தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 10ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.

தமிழ்நாடு, பஞ்சாப், கேரள மாநில அரசுகள்,  மாநில கவர்னர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கவர்னர்கள் அனுமதி மறுப்பதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், பஞ்சாப் மாநில அரசு, கவர்னருக்கு எதிராக தொடுத்துள்ள வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பஞ்சாப் மாநில அரசின் மனுவில், பஞ்சாபில் 7 மசோதாக்கiள  ஆளுநர் முடக்கி வைத்தது தொடர்பாக அம்மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில்,. பஞ்சாப் மாநிலம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டாக்டர்.அபிஷேக் மனு சிங்வி, நிதி நிர்வாகம், ஜிஎஸ்டியில் திருத்தங்கள், குருத்வாரா நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் ஜூலை மாதம் ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டதாகவும், மசோதாக்கள் மீதான நடவடிக்கையின்மை குறித்தும் தெரிவித்தார். ஆளுநரின் நடவடிக்கை ஆட்சியை பாதித்துள்ளது. விதிமீறல்கள் இருப்பதாகக் கூறி மசோதாக்களை பரிசீலிப்பதை ஆளுநர் ஒத்திவைத்தார் என்றும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, ஆளுநர் சார்பாக, இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடும்போது,  இந்த மசோதாக்கள் மீது ஆளுநர் “பொருத்தமான முடிவுகளை” எடுத்துள்ளதாகவும், வெள்ளிக்கிழமைக்குள் விவரங்களை தெரிவிக்க உறுதியளித்துள்ளதாகவும்  தெரிவித்தார்.

இந்த வழக்கின்  விசாரணையைத் தொடர்ந்து,  அரசு கொடுக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் முன் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது அப்போது, மசோதாக்களை reserve செய்து வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது, ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என நீங்கள் எவ்வாறு கூற இயலும்? மேலும் இந்த விவகாரத்தில் மாநில அரசு என் நீதிமன்றம் வர வேண்டும்? ஏற்கனவே வேறு ஒரு மாநிலத்திலும் இது போன்று கோரிக்கை எழுந்தது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்கக் கோரி நீதிமன்றங்களை அணுக வேண்டிய கட்டாயத்தில் மாநில அரசுகள் உள்ளதாக   வேதனை தெரிவித்த நீதிமன்றம், மாநில அரசு நீதிமன்றத்தை அணுகிய பின்னரே ஆளுநர்கள் மசோதாக்கள் மீது செயல்படும் போக்கை நிறுத்த வேண்டும் என்றும், இந்த விவகாரங்கள் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்னதாகவே கண்டிப்பாக ஆளுநர்கள் செயல்பட்டிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  வாய்மொழியாக கூறினார்.

மேலும், மாநில அரசுகள்  உச்ச நீதிமன்றத்திற்கு வந்த பிறகுதான் ஆளுநர் ஆளுநர் செயல்படத் தொடங்குவாரா என கேள்வி எழுப்பியவர்,   இது கூடாது,” என தெரிவித்ததுடன், இதுபோன்ற நிலைதான்  தெலுங்கானா மாநிலத்திலும்  ஏற்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார்.

அரசு ஒரு ரிட் மனு தாக்கல் செய்த பின்னரே மசோதாக்கள் குறித்து ஆளுநர்கள் முடிவு செய்கிறார்கள், முன்னதாக  “தாங்கள் (கவர்னர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் அல்ல என்பதை  மறந்துவிடக் கூடாது” என்பதை  நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் சட்டமன்றத்தை கூட்ட அனுமதி மறுத்த விவகாரத்தில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், ஒருமுறை ஒத்திவைக்கப்பட்ட சட்ட சபையை மீண்டும் கூட்ட  மாநில அரசுக்கு அதிகாரம் முடியாது என  கூறினார்.  கவர்னர் அறிவிக்காமல், சபையை கூட்டியது அரசியலமைப்பு திட்டத்திற்கு எதிரானது. உறுப்பினர்கள் ஒன்று கூடி மக்களை துஷ்பிரயோகம் செய்து சிறப்புரிமை கோரும் வகையில்  சபை  மீண்டும் கூடியதாக அவர் கூறினார்.

இதுகுறித்து கூறிய நீதிபதி, இந்த விஷயத்தில், அரசாங்கமும் ஆளுநரும் கொஞ்சம் “ஆன்மா தேடல்” செய்ய வேண்டும் என்றவர்,  “நாங்கள் மிகவும் பழமையான ஜனநாயகம், இந்த பிரச்சனைகள் முதல்வர் மற்றும் கவர்னர் இடையே தீர்க்கப்பட வேண்டும்” என்று தலைமை நீதிபதி கூறினார்.

விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞரும், இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான கே.கே.வேணுகோபால், கவர்னருக்கு எதிராக கேரள அரசு தாக்கல் செய்த இதேபோன்ற மனுவைக் குறிப்பிட்டார். “மக்கள் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது கவர்னர் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் அரசு மனு தாக்கல் செய்வது குறித்து அறிக்கை வெளியான பிறகு, அதை கோர்ட்டில் பார்ப்பதாக கூறுகிறார்” என்று வேணுகோபால் பெஞ்சை கேட்டுக் கொண்டார்.

கேரளாவின் மனு வெள்ளிக்கிழமை. நீதிபதி ஜேபி பார்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, கேரளா மற்றும் தமிழ்நாடு தாக்கல் செய்த மனுக்களை பஞ்சாபின் மனுவுடன் வெள்ளிக்கிழமை வெளியிட ஒப்புக்கொண்டது.

பஞ்சாப் வழக்கு தொடர்பாக, சொலிசிட்டர் ஜெனரல், நிலைமை குறித்து புதுப்பிக்கும் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஒப்புக்கொண்டார். நிலுவையில் உள்ள ஏழு மசோதாக்களில் இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக பஞ்சாப் அட்வகேட் ஜெனரல் தெளிவுபடுத்தினார்.

இதுபோல ஆளுநருக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளனர் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.  கேரளாவில் 3 மசோதாக்கள் மற்றும் தமிழ்நாட்டில் 12 – கிகும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு மனுக்கள் வரும் 10 ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலாகி உள்ளது என மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.

அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஆளுநர் முடிவெடுக்கு வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் தரப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாப் மாநில அரசின் மனு மீதான விசாரணையை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.