டெல்லி: மிசோரமில் முதற்கட்ட வாக்குப்பதிவும்,  சத்தீஸ்கர் இன்று   வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் விறுவிறுப்பாக வந்து தங்களது ஜனநாயக கடமையினை செலுத்தி வருகின்றனர்.  ஆயந்திரக் கோளாறு காரணமாக மிசோரம் முதலமைச்சர் ஜோராம் தங்கா வாக்களிக்க முடியாமல் வீடு திரும்பினார்.

5 மாநில தேர்தல் தேதிகள் ஏற்கனவே அறிவித்ததன்படி, சத்தீஸ்கர் (chhattisgarh) மற்றும் மிசோரம் (mizoram)மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது.

தெலுங்கானா, சத்தீஸ்கர் , மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய  5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. அதன்படி,  சத்தீஸ்கர் மாநிலத்தில்  நவம்பர் 7  மற்றும் 17 ஆம் தேதிகளில்  இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மிசோரம் மாநிலத்திலும்,  நவம்பர் 7 ஆம் தேதி (இன்றும்)  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ந்தேதி நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று சத்திஸ்கர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவும், மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கும் இன்று நடைபெற்று வருகிறது. இளம் வாக்காளர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் விறுவிறுப்பாக வந்து தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

த்தீஸ்கர் அமைச்சரும், கோண்டா சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான கவாசி லக்மா, சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல் 2023க்கு கோண்டா சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி எண் 36 இல் வாக்களித்தார்.

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்களிப்பதற்காக ஏராளமான மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முதல் தலைமுறை வாக்காளர்கள், இளைஞர்கள் தொடங்கி 100 வயதை கடந்த நபர்கள் வரை வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

மாநிலத்தின் முதலமைச்சரும், ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னணி தலைவரருமான ஜோராம் தங்கா வாக்களிக்கச் சென்றார். ஐஸ்வால் வடக்கு-II சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 19-ஐஸ்வால் வெங்கலை-I YMA ஹால் வாக்குச் சாவடியில் வாக்களிக்க சென்றபோது, ஆவணங்கள் அனைத்தும், சரிபார்க்கப்பட்டு வாக்களிக்கவும் சென்றார். ஆனால், கடைசி நேரத்தில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவரால் வாக்களிக்க முடியவில்லை. அதனால் அவர் வாக்களிக்காமல் திரும்பி சென்றார்.

மிசோரம் மாநிலத்தில் நடைபெற்று வரும் முதற்கட்ட வாக்குப்பதிவில் தனது வாக்கினை செலுத்திய, மிசோரம் ஆளுநர் ஹரி பாபு கம்பம்பட்டி ஐஸ்வால் தெற்கு – 2ல் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

மிசோரம் ஐஸ்வால் மேற்கு 3 தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த பின், வயதான வாக்காளர் பி லால்ரினவ்மா தனது மை விரலைக் காட்டி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியதாக பூரிப்புடன் கூறினார்.

மாநில காங்கிரஸ் தலைவர் லால்சவ்தா தனத வாக்கினை செலுத்திவிட்டு, செய்தியாளர்களிடம் கூறுகையில், “… நாங்கள் ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்… இந்த தொகுதியை கணிப்பது கடினம், ஆனால் நாங்கள் முதலிடம் பிடிப்போம் என்று நினைக்கிறேன்… 22 இடங்களைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஏற்கனவே பரிசீலித்துள்ளோம்.” என்றார்.

Photos courtesy: ANI