டெல்லி: அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபை முதற்கட்ட வாக்குப்பதிவின் முடிவில் மாலை 6 மணி நிலவரப்படி முறையே 72.14% மற்றும் 79.79% வாக்குகள் பதிவாகி உள்ளன.

அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்கத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளில் 47 இடங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியதில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

முதல்கட்டமாக காலை 11 மணி நிலவரப்படி, மேற்கு வங்கத்தில் 24.61 சதவீத வாக்குகளும், அசாமில் 24.48 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியானது. பின்னர் படிப்படியாக வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்தது.

அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் மாலை 5:30 மணி நிலவரப்படி முறையே 72.16% மற்றும் 79.79% வாக்குகள் பதிவாகின. மாலை 6 மணி நிலவரப்படி அசாமில் 72.14% மற்றும் மேற்கு வங்கத்தில் 79.79% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.