டில்லி:

மிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் உள்பட  அரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

288 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டி சட்டமன்றத்தின் ஆயுட்காலம் நவம்பர் 9-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அங்கும் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுஉள்ளது. மகாராஷ்டிராவில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 8.94 கோடி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அரியானா சட்டசபையின் ஆயுட்காலம்  நவம்பர் 2-ம் தேதியும் நிறைவடைய உள்ள நிலையில், அங்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளது.  அரியானாவில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1.82 கோடி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில்  செப்டப்மர் 27ந் தேதி மகாராஷ்ட்ரா மற்றும் அரியானாவில் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. அக்டோபர் 4ந் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு இறுதிநாள் என்று அறிவிக்கப்பட்டுஉள்ளது.

அக்டோபர் 21ந் தேதி மகாராஷ்டிரா மற்றும் அரியானாவிற்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்றும்,

அக்டோபர் 24ந் தேதி மகாராஷ்ட்ரா மற்றும் அரியானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும்  அக்.21 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வாக்கு எண்ணிக்கை  அக்.24ஆம் தேதி  நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் தேர்தல் நடத்தை அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.