சென்னை

டிகர் ரஜினிகாந்த் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்றுள்ளது.  இதையொட்டி அவர் இமாசலப்பிரதேசம் சென்றார்.  திரும்பும் வழியில் உத்தரப்பிரதேச மாநிலம் சென்று அம்மாநில முதல்வர் யோஇ ஆதித்யநாத்தை சந்தித்த போது அவர் காலில் விழுந்து ரஜினிகாந்த் வணங்கியது பேசு  பொருளானது.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  

”ரஜினி கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைத்திருந்தால் யோகி ஆட்சி போலவே தமிழகம் ஆகியிருக்கும் .  தமிழக மக்கள் ரஜினியை எவ்வளவு உயர்வாக நினைத்திருந்தார்கள். ஆனால் அவர் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒரே நிகழ்வில் காட்டிவிட்டார்.”

எனக் கூறி உள்ளார்.

மேலும் திமுக அமைப்புச் செயலர் ஆர் எஸ் பாரதி ரஜினிகாந்த் காலில் விழுந்தது அவரது சொந்த விருப்பம் என்று கருத்து தெரிவித்துள்ளார்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,

 “நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆத்யநாத்தின் காலில் வணங்கியதில் எந்த தவறும் இல்லை. தமிழகத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைந்திருந்தால் நல்லாட்சியாக அமைந்திருக்கும். ரஜினி குறித்து வேலையில்லாத அரசியல் கட்சிகள் தேவையில்லாத கருத்துக்கள் கூறுகின்றன.”

எனத் தெரிவித்துள்ளார்.