க்னோ

த்திரப் பிரதேச சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் இருக்கையின் கிழ் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பற்றி விசாரணை துவங்கியது,

பாட்னாவில் இப்போது சட்டசபைக் கூட்டம் நடந்து வருகிறது.  நேற்று நடந்த சோதனையில் எதிர்க்கட்சி தலைவரின் இருக்கைக்கு கீழ் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெடிபொருள் பெனட்டரி திரிடோல் டெட்ரநைட்ரேட் என்ற பவுடர் வகையை சேர்ந்தது ஆகும். இந்த வெடி பொருட்கள் எக்ஸ்ரே கதிரில் இருந்து தப்பித்து விடும் என்றும் கூறப்படுகிறது.  இது பெரும் சேதத்தை விளைவிக்கும் வெடி மருந்து ஆகும்.

இந்த குண்டு எப்படி சட்டசபையினுள் வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.  முதல்வர் யோகி ஆதித்யா இது குறித்து காவல்துறையுடன் கலந்துரையாடி உள்ளார்.   பாதுகாப்பு நடவடிக்கை பலவீனமாக உள்ளதாக அவர் கடிந்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

முதல்வர் இது பற்றிக் கூறுகையில், “இது நிச்சயம் தீவிரவாதிகளின் சதிவேலைதான்.  வெடி மருந்தை வைத்தவர்கள் யாரென்பதை விரைவில் கண்டுபிடிக்கப்படும்.  விசாரணையை துரிதப்படுத்த அரசு அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது” என்றார்.