பீகார் : மோதல் முற்றுகிறதா? அரசு விழாவுக்கு ஆப்செண்ட் ஆன தேஜஸ்வி

பாட்னா

ன்று நடைபெற்ற ஒரு அரசு விழாவில் நிதீஷ்குமாருடன் கலந்துக் கொள்வதாக இருந்த துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வரவில்லை.  அவர்களுக்குள் உள்ள மோதல் முற்றி வருவதாக பார்வையாளர்கள் கூறினர்.

பீகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணிக் கட்சிகளான JD(U) மற்றும் RJD ஆகிய கட்சிகள் இடையே தேஜஸ்வி யாதவ் மேல் ஊழல் குற்றம் சாட்டப்பட்டதிலிருந்து ஒரு வெளியே தெரியாத மோதல் உள்ளது.   தேஜஸ்வி, மற்றும் அவர் தந்தை லாலு ஆகியோரின் இல்லங்களிலும் அலுவலகங்களிலும் சோதனைகள் நடை பெற்றன.

இதைத் தொடர்ந்து தேஜஸ்வி ராஜினாமா செய்துவிட்டு வழக்கை சந்திக்க வேண்டும் எனவும், வழக்கில் வெற்றி பெற்ற பின் பதவியை தொடர வேண்டும் எனவும் நிதீஷ் குமார் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.  ஆனால் தேஜஸ்வி யாதவ் தரப்பில் ராஜினாமா என்னும் பேச்சுக்கே இடமில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டதற்காக பதவி விலகச் சொல்வது பைத்தியக்காரத் தனம் எனும் பதில் அளிக்கப்பட்டது.

சோனியா காந்தி தரப்பில் இருந்து நிதீஷ்குமாருக்கு அமைதியாக நடந்துக் கொள்ளுமாறு அறிவுரை வந்ததாகக் கூறப்படுகிறது.

இன்று  பாட்னாவில் உள்ள ஞான் பவனில் குஷால் யுவா கார்யக்ரம் என்னும் நிகழ்ச்சி  நடைபெற்றது.  இதில் நிதீஷ்குமார், தேஜஸ்வி இருவரும் கலந்துக் கொளவதாக அறிவிக்கப் பட்டிருந்தது.   ஆனால் நிதிஷ் குமார் மட்டுமே கலந்துக் கொண்டார்.  தேஜஸ்வி வரவில்லை.   அதற்கான காரணமும் தெரிவிக்கப் படவில்லை.  கடைசி நேரத்தில் அவர் வராததால் மேடையில் அவருக்காக போடப்பட்டிருந்த இருக்கை காலியாக காணப்பட்டது.


English Summary
Tejaswi didnot attend the govt function at patna but nithish attendedn